தகவல் உரிமைச் சட்டத்தை மீறிய ஜனாதிபதி செயலகம்:மேன்முறையீட்டில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றிய அதிகாரிகளால் கடந்த காலங்களில் ஒப்படைக்கப்பட்ட வாகனங்கள் தொடர்பான விபரங்களை வெளியிடுமாறு தகவல் உரிமை ஆணைக்குழு ஜனாதிபதி செயலகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் கோரப்பட்ட விபரங்களை ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னர் உரியவரிடம் ஒப்படைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தகவலை வழங்க மறுப்பதற்கான காரணங்கள்
முன்னாள் ஜனாதிபதிகளின் பதவிக் காலத்தில் நியமனங்கள் பெற்ற அதிகாரிகளால் செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்ட வாகனங்கள் தொடர்பில் கோரப்பட்ட தகவல்களை வழங்குமாறே ஆணைக்குழு ஜனாதிபதி செயலகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
ஊடகவியலாளர் ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி, 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் திகதி தகவல் உரிமை சட்டத்தின் பேரில் கோரப்பட்ட தகவல்களே 2026ஆம் ஆண்டு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால் அத்தகைய தகவல்களை வழங்குவது தனியுரிமை மீறுவதாகவும் பாதுகாப்பு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் கூறி, செயலகம் வாகனப் பதிவு எண்களை வெளியிட மறுத்துவிட்டது.
பல சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி செயலகம் தனது நிலைப்பாட்டை மீண்டும் மீண்டும் மாற்றி தகவல் வழங்குவதை மறுத்துள்ளது.
ஏழு முறை அனுப்பப்பட்ட மனு
பின்னர் ஊடகவியலாளர் மார்ச் 20, 2025 அன்று தகவல் அறியும் உரிமை ஆணையக்குழுவில் மேல்முறையீடு செய்தார். ஆணைக்குழு ஏழு முறை செயலகத்திற்கு மனு அனுப்பியது, ஆனால் பிரதிநிதிகள் பல முறை முன்னிலையாகவில்லை.
2026 ஜனவரி 13 ஆம் திகதி நடைபெற்ற மேல்முறையீட்டு விசாரணையில், ஆணைக்குழு,செயலகத்தின் நிலைப்பாட்டை நிராகரித்து, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் தகவலை வெளியிடுமாறு அறிவுறுத்தியது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 2 நாட்கள் முன்
இந்தியாவில் குவிய போகும் கோடிகள்; இந்தியா - ஐரோப்பா FTA ஒப்பந்தத்தில் எந்த துறைகளுக்கு லாபம்? News Lankasri
மீண்டும் வந்த கதிர், ஞானம்.. அதிர்ச்சியில் ஜனனி மற்றும் பெண்கள்.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்.. Cineulagam