ஜனாதிபதி செயலகத்தில் பறக்கவிடப்பட்ட நந்திக் கொடிகள் (Photos)
இந்துக்களின் புனித பண்டிகையில் ஒன்றான தீபாவளிப் பண்டிகையை கொண்டாடும் வகையிலான அனைத்து ஏற்பாடுகளும் ஜனாதிபதி செயலகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் ஜனாதிபதி செயலக வளாகத்தில் நந்திக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதுடன், மின் விளக்குகளினாலும் ஜனாதிபதி செயலகம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
தீபாவளிப் பண்டிகை
அண்மையில் நடைபெற்ற இந்துக்களின் பூஜை வழிபாடுகளில் ஒன்றான நவராத்திரி விழா, ஜனாதிபதி சார்பாக ஏற்பாடு செய்யப்படாமை தொடர்பாக இந்து மதம் சார்ந்தவர்களினால், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
அதுதொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கவனத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்துச் சென்றிருந்ததுடன், தீபாவளிப் பண்டிகையை ஜனாதிபதி சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.







அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri
