சுற்றுலா விடுதிகளாக மாற்றப்படும் ஜனாதிபதி மாளிகைகள்
நுவரெலியா, அநுராதபுரம், மஹியங்கனை மற்றும் கதிர்காமம் போன்ற பகுதிகளில் உள்ள ஜனாதிபதி மாளிகைகளை சுற்றுலா விடுதிகளாக பயன்படுத்த முதலீடு செய்யுமாறு முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
தனியார் துறையைச் சேர்ந்த பங்குதாரர்களுடன் 2026 சுற்றுலாத் துறை குறித்த பட்ஜெட்டுக்கு முந்தைய கலந்துரையாடல் நேற்று (29) பிற்பகல் ஜனாதிபதி பணியகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
ஜனாதிபதி மாளிகைகள்
இக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டு வசதியான விடுமுறை விடுதிகளாக மேம்படுத்துவதில் முதலீடு செய்யுமாறும் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக விரைவில் முறையான திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.
சுற்றுலாத் துறையில் தற்போது நிலவும் குறைபாடுகள் மற்றும் சவால்கள் குறித்து முதலீட்டாளர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தனர், மேலும் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கான பரிந்துரைகளை வழங்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டனர்.





இஸ்ரேலுக்கான வான்வெளியை மூடல்! அனைத்து வர்த்தகத்தையும் துண்டிக்க முடிவு..அறிவித்த துருக்கி News Lankasri

சூப்பர் சிங்கர் ஸ்பூர்த்தியை உங்களுக்கு நினைவு இருக்கா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
