இஷாரா செவ்வந்தியுடன் தொடர்பில் இருந்த நபர்! ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணை
கணேமுல்லை சஞ்சீவ கொலைச் சம்பவத்தில் தேடப்படும் சந்தேக நபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தியுடன் தொடர்பில் இருக்கும் நபரொருவரைக் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நேற்றைய தினம் குறித்த நபர் தொடர்பான விபரங்களை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த குற்றப் புலனாய்வுத் திணைக்கள பொலிசார், மேற்கண்ட விபரங்களை நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
அடிக்கடி வந்த தொலைபேசி அழைப்புக்கள்
அதன் பிரகாரம் குறித்த நபர் இஷாரா செவ்வந்தியின் தொலைபேசிக்கு அடிக்கடி அழைப்புகளை மேற்கொண்டுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் குறித்த சந்தேக நபருக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்கவும் அவரது தொலைபேசி அழைப்பு தரவுகளை பரிசோதிக்கவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
தலைமறைவாகியுள்ள இஷாரா செவ்வந்தியுடன் தொடர்பில் இருந்த மூவர் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





சூப்பர் சிங்கர் ஸ்பூர்த்தியை உங்களுக்கு நினைவு இருக்கா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
