சுரேஷ் சலே குறித்து நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்த சிஐடியினர்
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே குறித்து குற்றப் புலனாய்வுத்துறையினர் நீதிமன்றத்துக்கு விசேட அறிக்கையொன்றைச் சமர்ப்பித்துள்ளனர்.
இன்று(8) காலை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நகர்வுமனுவொன்றைத் தாக்கல் செய்து, குற்றப் புலனாய்வுத்துறையினர் குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளனர்.
குற்றப் புலனாய்வுத்துறை
குறித்த அறிக்கையில் தற்போதைக்கு சுரேஷ் சலே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்புக் காவல் உத்தரவுகளின் பேரில் தமது காவலில் இருந்த முன்னாள் புலனாய்வு சேவைப் பணிப்பாளர் சுரேஷ் சலேவை, அவரது உடல்நிலையைக் கருத்திற் கொண்டு கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் துறை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் துறையின் காவலில் இருந்த சுரேஷ் சலேவை நேற்று இரவு (07) கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தாமதப்படுத்தக் கூடாது! அருட்தந்தை சிரில் காமினி
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு, இதுவரை குற்றப் புலனாய்வுத் துறையின் காவலில் இருந்து வந்தார்.

தமக்கு மனிதாபிமானமற்ற முறையில் சித்திரவதை செய்யப்படுவதாகக் கூறி, குற்றப் புலனாய்வுத் துறைக்குள்ளேயே அவர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியிருந்தார்.
அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, சுரேஷ் சலேவை கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது
ஈரானுக்கு மரண அடி உறுதி... பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு கொந்தளித்த இஸ்ரேல் News Lankasri