ஜனாதிபதி நிதியத்தில் அரசியல்வாதிகள் மேற்கொண்ட மோசடி அம்பலம்
ஜனாதிபதி நிதியத்தில் புலமைப்பரிசில் பெற்று பட்டபின் படிப்பு மற்றும் இதர கல்வி நடவடிக்கைகளுக்காக 2005ஆம் ஆண்டு தொடக்கம் 2014 வரை அரசியல் வாதிகளின் பிள்ளைகள் மற்றும் அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் பெருமளவானோர் வெளிநாட்டு கல்கலைக்கழங்களுக்கு சென்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அருன பனாகொட தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்ற அமர்வில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் கல்வி, உயர்கல்வி அமைச்சரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திர பண்டார கேட்ட கேள்விக்கு பிரதமர் ஹரனி சார்பில் பதிலளித்த அருன பனாகொட இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், இவ்வாறு சென்றவர்களின் நீண்ட பட்டியல் காணப்படுவதாகவும் அதை நான் சபைக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்ததுடன் அதில் சிலரின் பெயர்களையும் வெளியிட்டார்.
நிபந்தனைகள்..
அதேவேளை, வெளிநாட்டு பல்கலைக்கழங்களுக்கு சென்றவர்களின் விபரத்தில் நிபந்தனைகள் தொடர்பில் குறிப்பிடப்படவில்லை என்றார்.
2005 சரத்சந்திர ராஜகருணா கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மகன், 2006 கருணாசேன கொடித்துவக்குவின் மனைவி அல்லது மகள் என நினைக்கிறேன்.
ஐ.எம்.கொடிதுவக்கு, 2006 நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணனின் மனைவி, 2006 அரசியல்வாதியின் உறவினர் தினேஸ் என்பவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி நிதியத்தில் குறித்த புலமைப்பரிசிலுக்காக 2005-2014 வரை ஒவ்வொறு வருடமும் பல மில்லியங்கள் வழங்கப்பட்டுள்ளன.
வறுமையில் வாடும் உயர்கல்வி கற்க முடியாதவர்களுக்கு வழங்கப்படும் குறித்த நிதியம் 2005 தொடக்கம் 2014 வரை மோசடியாகவே வழங்கப்பட்டுள்ளது.
அவ்வாறு வெளிநாடு சென்றவர்கள் படிப்பை முடித்துக் கொண்டு நாடு திரும்பினரா என்ற விபரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் மாலை திருவிழா





சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri
