வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்பு குழு முன்னெடுத்த கவனயீர்ப்பு போராட்டம்
வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் முன்னெடுப்பில் நடைபெறும் 100 நாள் செயல்முனைவின் நான்காவது வருடத்திற்கான தொடர் இம்மாதம் ஆரம்பிக்கப்பட்டு நேற்று நான்காவது நாளாக மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தின் கட்டுமுறிவு சந்தி பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
"சமூகப் பிரச்சினைகளும் - சமஸ்டி முறையிலான தீர்வுகளும்" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் மக்கள் வாழ்வின் உண்மையான சவால்களை முன்வைத்து நிரந்தர தீர்வுகளுக்கான அரசியல் உரையாடலை உருவாக்கும் நோக்கில் இந்த 100 நாள் செயல் முனைவு நடைபெறுகின்றது.
ஆட்சிப் பொறுப்பு
இலங்கை அரசே இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீள பெற முடியாத சமஸ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை உறுதி செய்க, சமஸ்டியே தீர்வு, எங்கள் வளம் எங்கள் உரிமை என்கின்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் கவனஈர்ப்பினை முன்னெடுத்தனர்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய தலைமைத்துவங்களுடன் இலங்கையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது.
ஜனநாயகம், கட்டமைப்பு மாற்றம், இன மத பேதமின்மை எனும் கொள்கைகளை முன்வைத்து இவர்கள் ஆட்சிக்கு வந்துள்ளனர் எனினும் அரசியல் தீர்வு குறித்து தேசிய மக்கள் சக்தி அரசு மௌனம் காத்து வருகின்றது எனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
இனவாதத்தில் சார்ந்து இருந்த பழைய அரசுகளைப் போல் இல்லாத தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது நிலையானதும் கௌரவமானதும் உரிமைகளுடன் கூடிய சமஸ்டி முறையிலான அரசியல் அதிகார பகிர்வை உறுதிப்படுத்தும் தீர்வு திட்டத்தை உடன் முன்னெடுக்க வேண்டும் எனவும் இதன் போது வலியுறுத்தப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |












ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

மீனாவிற்கு புடவை எல்லாம் வாங்கிகொடுத்து செல்லம் என கொஞ்சம் விஜயா.. சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன தான் நடக்கிறது? Cineulagam

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan
