நாடு முழுவதும் ஆயுதப்படைகளை களமிறக்க ஜனாதிபதி உத்தரவு
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் ஆயுதப்படைகளை வரவழைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (02.07.2024) குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நாற்பதாவது அதிகாரமாக இருந்த பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12ஆவது பிரிவின் கீழ் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என சபாநாயகர் கூறியுள்ளார்.
உயர் நீதிமன்றம் தீர்மானம்
மேலும், பொருளாதார உருமாற்ற சட்டமூலத்தின் பல சரத்துகள் அரசியலமைப்பிற்கு முரணானது என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி, சட்டமூலம் நாடாளுமன்றத்தின் சிறப்பு பெரும்பான்மையால் மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
எனினும் அந்த சரத்துகள் திருத்தப்பட்டால் தனிப் பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam

Ethirneechal: வீட்டிற்கு திரும்பிய மருமகள்கள்! கதிரை அறைந்த விசாலாட்சி... எதிர்பாராத திருப்பம் Manithan
