ஜனாதிபதியின் உத்தரவு பயனற்ற செயற்பாடு!நிஹால் அபேசிங்க
நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 60 அகவைக்கும் மேற்பட்டவர்களை இலக்காகக் கொண்டு வாரத்திற்கு ஒரு முறையாவது விரைவான அன்டிஜன் சோதனைகள் நடத்த ஜனாதிபதியின் உத்தரவு பயனற்ற செயல்பாடு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது கோவிட் இறப்புக்களை தடுக்க பங்களிக்காது. மாறாக,அன்டிஜன் சோதனை கருவிகளை இறக்குமதி செய்பவர்களுக்கு மட்டுமே பயனளிக்கும் அது பயன் தரும் என்று, இலங்கை தொற்றுநோயியல் பிரிவின் முன்னாள் தலைமை நிபுணர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
இந்த விடயத்தில், ஜனாதிபதியை யாரோ தவறாக வழிநடத்தியுள்ளார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை முடக்கல் காலத்தில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு, இந்த அன்டிஜன் சோதனை கருவிகளுக்கு செலவழிக்கப்பட்ட பணம் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
நாட்பட்ட நோய்கள் உள்ளவர்களுக்கு வாரந்தோறும் அன்டிஜன் சோதனைகளை நடத்துவது அந்த மக்களிடையே இறப்பைக் குறைக்காது. அது சோதனை கருவிகளை இறக்குமதி செய்பவர்களுக்கு மட்டுமே இது பயனளிக்கும் என்று இலங்கை தொற்றுநோயியல் பிரிவின் முன்னாள் தலைமை நிபுணர் நிஹால் அபேசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.