ஜனாதிபதி, பொதுத்தேர்தல்கள் முன்கூட்டி நடாத்தப்படாது: ஜீ.எல்.பீரிஸ்
ஜனாதிபதி தேர்தலோ அல்லது பொதுத் தேர்தலோ முன்கூட்டி நடாத்தப்படாது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சிலர் விரைவில் பெரிய தேர்தல் ஒன்று நடைபெறும் எனக் கருதுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் ஓரிரு நாட்களில் ஜனாதிபதி அல்லது பொதுத் தேர்தல் நடாத்தப்பட உள்ளதாகவே சிலர் நடந்து கொள்கின்றார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத் தரப்பில் சில குறைபாடுகள் காணப்படுவதனை மறுப்பதற்கில்லை எனவும் அவற்றை எதிர்வரும் மூன்றாண்டுகளில் பூர்த்தி செய்து கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கான திட்டத்தை அரசாங்கம் வகுத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள் Manithan
Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் News Lankasri