ஜனாதிபதியின் புலமைப்பரிசில் திட்டம் வவுனியாவில் ஆரம்பித்து வைப்பு
வறிய மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஜனாதிபதியின் புலமைப் பரிசில் திட்டம் வவுனியா மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வவுனியா, மதவுவைத்தகுளம் பகுதியில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் குறித்த நிகழ்வு இன்று (16.07) இடம்பெற்றது.
நாடு பூராகவும் வறிய மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் புலமைப் பரிசில் திட்டத்தின் கீழ் பல பாடசாலைகளிலும் இருந்து பல மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அதற்கமைவாக வவுனியா மாவட்டத்தில் முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட சில பாடசாலைகளை சேர்ந்த மாணவர்களுக்கு ஜனாதிபதியின் புலமைப் பரிசில் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், வன்னி மாவட்ட நடாளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன், ஜனாதிபதி செயலக மேலதிக சிரேஸ்ட செயலாளர் சமன்பந்துலசேன, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், வவுனியா தெற்கு மற்றும் வடக்கு வலய கல்விப் பணிப்பாளர்கள், பிரதிக் கல்விப்பணிப்பாளர்கள், பிரதேச செயலாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.















அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
