மயிலிட்டியில் மதகுருமார் கலந்துகொள்ளாத ஜனாதிபதியின் நிகழ்வு
மயிலிட்டியில் ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்வில் மதகுருமார்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலிட்டித் துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இன்றையதினம்(01.09.2025) திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மதகுருமார்கள் கலந்து கொள்ளவில்லை. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மயிலிட்டி இறங்குதுறை அதிகாரிகளால், நிகழ்வுக்கு வருமாறு அப்பகுதி இந்து மதகுரு மற்றும் கிறிஸ்தவ பாதிரியாருக்கு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டிருந்தன.
விமர்சனங்கள்
இந்நிலையில், நேற்றைய தினம் மதகுருமார்களை சந்தித்த அதிகாரிகள், நிகழ்வுக்கு வர வேண்டாம் என கோரியுள்ளனர்.
மயிலிட்டி நிகழ்வுக்கு பௌத்த மதகுரு சார்பில் தையிட்டி விகாரதிபதியை அழைக்க நேரிட்டால், அது விமர்சனங்களை ஏற்படுத்தும் என்பதால், நிகழ்வில் எந்த மதகுருமாரையும் அழைக்காது விடுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறியே, நிகழ்வுக்கு மத குருமார்களை வரவேண்டாம் என கூறப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அம்பானி உடன் இணையும் சுந்தர் பிச்சை, மார்க் ஜூக்கர்பெர்க்! ரூ.855 கோடிக்கு உருவாகும் புதிய திட்டம் News Lankasri

சத்தமே இல்லாமல் நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்- பிக்பாஸ் பிரபலங்களுக்கு குவியும் வாழ்த்துகள் Manithan
