மக்கள் நினைத்தால் மீண்டும் ரணிலுக்கு வாய்ப்பு! மொட்டு அறிவித்தது
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து மக்களுக்கு ஒருவித நிவாரணத்தை வழங்க முடியும். எனவே, அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குவதில் எனக்கு எந்த எதிர்ப்பும் இல்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இது தெடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாம் தேர்தலுக்குச் செல்வதா இல்லையா என்பது நாட்டின் பொருளாதார நிலை மற்றும் இதர சட்ட அம்சங்களைப் பொறுத்தே தீர்மானிக்கப்பட வேண்டும்.
அரசாங்கமோ அல்லது நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையோ தேர்தலுக்குச் செல்லத் தீர்மானித்தால், அது தேசியமட்டத் தேர்தலாக இருக்க வேண்டுமே தவிர, மாகாண மட்டத் தேர்தல்களை நடத்துவதற்கான நேரம் இதுவல்ல.
ஜனாதிபதித் தேர்தல் இதுவரை அறிவிக்கப்படவில்லை
கண்டிப்பாக அது ஜனாதிபதி அல்லது நாடாளுமன்றத் தேர்தலாகத்தான் இருக்க வேண்டும். அதைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
முன்கூட்டியே தேர்தலை நடத்துவது அரசியலமைப்புக்கு முரணானால், அது நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையின் ஒப்புதலுடன் செய்யப்பட வேண்டும்.
இத்தருணத்தில் தேர்தலை நடத்துவதை விட பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்கான வேலைத்திட்டத்தை மக்கள் நடைமுறைப்படுத்த விரும்புகிறார்கள் என நான் நினைக்கிறேன்.
தேர்தலுக்காக கூக்குரலிடுபவர்கள் இந்த இக்கட்டான தருணத்தில் அரசாங்கத்துடன் கைகோர்த்து தற்போதைய நெருக்கடியை சமாளிக்க தங்கள் ஆதரவை வழங்க வேண்டும்.
ஜனாதிபதித் தேர்தல் இதுவரை அறிவிக்கப்படவில்லை அல்லது அது தொடர்பில் எவரும் கருத்து வெளியிடவில்லை.
சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்துமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்திக்குள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தி பிளவுபட்டு, அதன் சில உறுப்பினர்கள் ஐ.தே.கவுடன் கைகோர்த்து விடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாகவே அவர் அவ்வாறு செய்தார். எங்களுக்கு அப்படிப்பட்ட பயமோ அவசரமோ இல்லை.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படும் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி என்ற வகையில் தீர்மானம் எடுக்கும். எமக்குப் பொருத்தமான வேட்பாளர் இல்லை என்றால், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என பெரும்பான்மையான மக்கள் கருதினால், அதனை எமது கட்சி கவனத்தில் கொள்ளும் என நினைக்கின்றேன்.
எனது தனிப்பட்ட கருத்து என்னவெனில், எமது கட்சித் தலைவர்கள் தமது பதவிகளை உறுதிப்படுத்திக் கொள்ள முடியாமல் இறுதியாக அவர்கள் விலகிக் கொண்டார்கள். அதேபோன்று அவர்களை தலைவர்கள் என்று அழைப்பவர்களும் சவால்களை ஏற்கத் தயங்கினார்கள்.
எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து மக்களுக்கு ஒருவித நிவாரணத்தை வழங்க முடியும். எனவே, அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குவதில் எனக்கு எந்த எதிர்ப்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |