செப்டம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல்: ஆணைக்குழுவின் விசேட அறிவித்தல்
எதிர்வரும், செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையான காலப்பகுதிக்குள் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணையகம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்றைய தினம் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில் 39 பேரின் வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஜனாதிபதித் தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தியவர்கள் மற்றும் வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட ஊடக அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல்
குறித்த அறிவித்தலில்,
“இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு, பதவியிலுள்ள ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னரும் குறைந்தது இரண்டு மாதங்களுக்கு மேற்படாததுமான ஒரு காலப்பகுதியில் நடைபெறுதல் வேண்டுமென அரசியலமைப்பின் 31 உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளதாலும்,
அரசியலமைப்பின் 104 ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டத்தின் 2 ஆம் பிரிவினால் தேர்தல் ஆணைக்குழுவுக்கு உரித்தாக்கப்பட்ட தத்துவங்களின் பயனைக் கொண்டு, 2394/51 ஆம் இலக்கம் கொண்ட 2024 ஜுலை மாதம் 26 ஆம் நாளாகிய வெள்ளிக்கிழமை, பிரசித்தப்படுத்தப்பட்ட அரசாங்க அதிவிசேட வர்த்தமானி மூலம் 2024 ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி ஜனாதிபதியைத் தேர்தெடுப்பதற்கான வேட்பாளர்களை பெயர் குறிந்து நியமிக்கும் நாளாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
2024 ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி மதியம் 12.00 மணி வரை வைப்புப்பணம் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், அக்காலப்பகுதியிலுள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளினால் முன்மொழியப்பட்ட 22 வேட்பாளர்களும், வேறு அரசியல் கட்சிகள் சார்பாக முன்மொழியப்படும் 01 வேட்பாளரும், தேருநர்களினால் முன்மொழியப்படும் 17 வேட்பாளர்களும் என்ற அடிப்படையில் 40 வேட்பாளர்கள் சார்பாக வைப்புப் பணம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அவ்வாறு வைப்புப் பணம் செலுத்திய வேட்பாளர்களில் 22 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளினதும், 01 வேறு அரசியல் கட்சியினதும், தேருநர்களிளால் முலிபொழியப்படும் 16 வேட்பாளர்களினதும் 39 பெயர் குறித்த நியமனப்பத்திரங்கள் இன்றைய தினம் மு.ப. 09.00 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை தேர்தல் ஆணைக்குழுவுக்கு கையளிக்கப்பட்டது.
அத்துடன், வைப்புப்பணம் செலுத்திய வேட்பாளர்களில் வேட்பாளர் ஒருவர் பெயர் குறித்த நியமனப்பத்திரத்தைக் கையளிக்கவில்லை. அதன்படி, இன்றைய தினம் கையளிக்கப்பட்ட 39 பெயர் குறித்த நியமனப் பத்திரங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.”என குறிப்பிடப்பட்டுள்ளது.







குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
