தேர்தல் தொடர்பான கடமைகளில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர் மீது தாக்குதல்
அம்பாறையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஊடகக் கடமைகளில் ஈடுபட்டிருந்த சுயாதீன ஊடகவியலாளர் தாக்கப்பட்டுள்ளதுடன் அவரது மோட்டார் சைக்கிளும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது அம்பாறை மாவட்டம் கல்முனை தேர்தல் தொகுதியில் உள்ள மருதமுனை பொது நூலக முன்றலில் இன்று (21.09.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மருதமுனையைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரே தாக்குதலில் காயமடைந்த நிலையில், கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸில் முறைப்பாடு
இந்த தாக்குதல் தொடர்பில் கல்முனை பிராந்திய மனித உரிமை ஆணைக்குழு அம்பாறை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி உள்ளிட்ட தரப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் உரிய நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் தாக்கப்பட்ட ஊடகவியலாளர் பெரிய நீலாவணை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
மேலதிக விசாரணை
அத்துடன், ஊடகவியலாளரின் கால் பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளதுடன் அவரது மோட்டார் சைக்கிளும் உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri
பிரித்தானியாவின் மில்லியனர் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி - வெளிநாடுகளில் குடியேறும் செல்வந்தர்கள் News Lankasri
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan