மீண்டும் களமிறங்கும் ரணில்! பொதுஜன பெரமுனவின் தீர்மானம் தொடர்பில் வெளியான தகவல்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க என்பது ஆளும் தரப்பு உறுப்பினர்களின் தனிப்பட்ட தீர்மானமே தவிர கட்சியின் தீர்மானமல்ல என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களின் கோரிக்கைக்கு அமைய சிறந்த தீர்மானத்தை உரிய நேரத்தில் அறிவிப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்த போது அரசாங்கத்தை பொறுப்பேற்குமாறு பிரதான எதிர்க்கட்சி தலைவர்களிடம் பலமுறை அழைப்பு விடுத்தோம். பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அரசாங்கத்தை பொறுப்பேற்றால் தமது எதிர்கால அரசியல் பாதிக்கப்படுமோ? என்ற அச்சத்தில் அவர்கள் அரசாங்கத்தை ஏற்கவில்லை. நெருக்கடியான சூழ்நிலையில் சவால்களை பொறுப்பேற்க ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க முன்வந்தார்
கட்சியின் தீர்மானம் அல்ல
ரணில் விக்ரமசிங்கவை இடைக்கால ஜனாதிபதியாக தெரிவு செய்யும் தீர்மானத்தை கட்சி மட்டத்தில் முன்னெடுத்தோம். 134 உறுப்பினர்களின் ஆதரவுடன் அவரை ஜனாதிபதியாக்கினோம்.
அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணக்கமாக செயற்படுவதால் எமது கட்சியின் அடிப்படை கொள்கைகளை தேசிய மட்ட தீர்மானங்களின் போது விட்டுக் கொடுக்க முடியாது. கட்சியின் கொள்கைகளை பாதுகாத்துக் கொண்டு அரசியல் தீர்மானங்களை எடுப்போம்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க என ஆளும் தரப்பின் உறுப்பினர்களில் ஒருசிலர் குறிப்பிடுவது அவர்களின் தனிப்பட்ட கருத்தே தவிர கட்சியின் தீர்மானம் அல்ல.
2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தற்போது அவதானம் செலுத்துவது அவசியமற்றது. நாட்டு மக்களின் கோரிக்கைக்கு அமைய சிறந்த தீர்மானத்தை உரிய நேரத்தில் அறிவிப்போம்.
சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற் போல் அரசியல் செய்பவர்களை இணைத்துக் கொண்டால் ஸ்தீரமற்ற அரசாங்கம் தோற்றம் பெறும்.நிலையான அரசாங்கத்தை அமைக்க அவதானம் செலுத்தியுள்ளோம் என குறிப்பிட்டார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri
