தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு! வேட்பாளர் தொடர்பில் மைத்திரியின் தகவல்
தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் சுதந்திர கட்சியின் சார்பில் வேட்பாளர் களமிறக்கப்படுவாரா இல்லையா என்பது குறித்து அறிவிப்போம் என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் மாகாணசபைத் தேர்தலை இனியும் தாமதப்படுத்தாது நடத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரால் கோரிக்கை விடுக்கப்பட்டது.
சர்வகட்சி மாநாட்டில் வலியுறுத்தினோம்..
இது தொடர்பிலும் , மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பிலும் நாம் எமது நிலைப்பாட்டை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பில் அரசாங்கம் முதலில் அதன் நிலைப்பாட்டை தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
அதேபோன்று எந்த தேர்தலானாலும் அதனை உரிய நேரத்தில் நடத்த வேண்டும் என்ற விடயங்களை நாம் சர்வகட்சி மாநாட்டில் வலியுறுத்தியிருந்தோம்.
அதற்கேற்ப அரசாங்கம் அதன் நிலைப்பாட்டை ஒரு முன்மொழிவாக முன்வைக்குமானால் அது தொடர்பில் கட்சி மட்டத்தில் ஆராய்ந்து நாம் பதிலளிப்போம்.
முதலில் இடம்பெற வேண்டியது தேர்தலா அல்லது அரசியலமைப்பு திருத்தமா என்பதையும் அரசாங்கம் குறிப்பிட வேண்டும்.
எந்த சந்தர்ப்பத்திலும் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ளக் கூடியவாறு நாம் சுதந்திர கட்சியை மீள்கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.
அதற்கமைய இனிவரும் தேர்தல்களில் முற்போக்கான கூட்டணியொன்றை அமைத்து அதன் ஊடாக போட்டியிட தீர்மானித்துள்ளோம்.
எம்மால் அமைக்கப்படவுள்ள கூட்டணி தொடர்பில் கொள்கை ரீதியாக இணங்கக் கூடிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் சுதந்திர கட்சியின் சார்பில் வேட்பாளர் களமிறக்கப்படுவாரா இல்லையா என்பது குறித்து அறிவிப்போம் என குறிப்பிட்டார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
