ஜனாதிபதி தெரிவில் போட்டியிட களமிறங்கும் டலஸ்
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய பலர் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும இடைக்கால ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த ஜனாதிபதி தெரிவிற்கான வேட்புமனுக்கள் அடுத்த வாரம் கோரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விரைவில் புதிய ஜனாதிபதி
நாட்டில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அதிகரித்த போராட்டங்களால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு தப்பிச் சென்றதுடன், பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ளார்.
புதிய ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வதற்கான நடைமுறைகளை ஆரம்பிப்பதற்காக நாளை நாடாளுமன்றம் கூடவுள்ளது.
ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனுக்கள் சில நாட்களுக்குப் பிறகு ஏற்றுக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அதன் பின்னர் ஜூலை மாதம் 20ஆம் திகதிக்குள் புதிய ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.