மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை
மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.
மாகாணசபைத் தேர்தல் சம்பந்தமாக முன்வைக்கப்பட்டுள்ள திருத்தச் சட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி விட்டு, உடனடியாக தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அங்கம் வகிக்கும் மாகாண சபைகள் ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
தொகுதி வாரி முறை, எல்லை நிர்ணயம், 50க்கு 50 பெண்களுக்கான விகிதாசாரம் என்பவற்றை உள்ளிடக்கி கடந்த அரசாங்கம் கொண்டு வந்த திருத்தச் சட்ட மூலத்தை அந்த அரசாங்கமே தோற்கடித்தது. இதன் காரணமாக மக்கள் பிரதிநிதிகள் இன்றி மாகாணசபை செயற்பட்டு வருகிறது என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
இந்த நிலைமை குறித்து மக்களுக்கு விளக்கி, தேர்தலை உடனடியாக நடத்துவதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் தேசியத்துவம், பாதுகாப்பு என்பவற்றுக்கு முன்னுரிமை வழங்கி, கட்சியின் கொள்கை மற்றும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கடந்த 15 மாத காலத்தில் தீர்மானங்களை எடுத்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

15 நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கும் F-35B பிரித்தானிய போர் விமானம்: அகற்றப்பட்ட தரவுகள் News Lankasri

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
