மாகாண சபைக்கு அதிகாரங்களை வழங்க மிக அக்கறையுடன் செயல்பட்டு வரும் ஜனாதிபதி - அரவிந்தகுமார் (Photos)
13-வது திருத்தச் சட்டத்தை முற்றாக நடைமுறைப்படுத்தி மாகாண சபைக்கு அதிகாரங்களை வழங்க வேண்டும் என தற்போதைய ஜனாதிபதி மிக அக்கறையுடன் செயல்பட்டு வருகின்றார் என கல்வி ராஜாங்க அமைச்சர் ஏ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு வாகரை கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் நூற்றாண்டு விழா பாடசாலை அதிபர் ஏ.அரசரத்தினம் தலைமையில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மாகாண சபைகள் அமைக்கப்பட்டதே வடகிழக்கு மக்களுக்கான பிரச்சனைகளை தீர்ப்பதற்காகவே, ஆனால் மாகாண சபையில் உள்ளவர்களே, நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு மாகாண சபையின் அதிகாரங்களை குறைக்க வேண்டும் எனும் இரட்டை நிலைப்பாட்டில் உள்ளனர்.
அதிகரித்த அதிகாரங்கள்
முன்பு இருந்ததை விட தற்போது மாகாண சபைக்கு அதிக அதிகாரங்கள் உள்ளதாகவே காணப்படுகின்றது.அதனை சிறிது சிறிதாக அதிகரித்துக் கொள்ள திட்டங்களை வகுக்க வேண்டும். மாகாண சபைகள் தொடர்ச்சியாக இயங்கி வந்திருந்தால் இன்று அதிகாரங்களைக் கொண்டதாக மாகாண சபைகள் காணப்பட்டிருக்கும்.
நாம் நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் கொண்டு வருவதாயின் மாகாண சபையின் அங்கீகாரம் பெற வேண்டிய அளவுக்கு தற்போது அதிகாரங்கள் வலுப்பெற்றுள்ளன. தற்போதைய ஜனாதிபதி மாகாண சபைக்கு அதிகாரங்களை வழங்கி அவற்றை சுயாதீனமாக இயங்கச் செய்வதே அவரது நிலைப்பாடாகும்.
நாடாளுமன்றத்தின் சுமைகளை குறைப்பதற்கு இந்த மாகாண சபைகள் சிறப்பாக இயங்க வேண்டும் என்பதே அவரின் நிலைப்பாடு எனவும் கூறினார்.
கல்வி அபிவிருத்திக்கான நிதி
இப்பாடசாலை சமூகத்தில் போதைப் பொருள் பாவனை அற்றதாகக் காணப்படும் செய்தி மிகவும் மகிழ்ச்சி அடைய செய்வதாகவும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தற்போது சிறிது சிறிதாக மாறி வருவதுடன் நல்ல இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது.
அடுத்த வருடம் கல்வி அபிவிருத்தி பணிகளுக்காக நிதிகள் ஒதுக்கப்படும் என நம்பிக்கை எமக்கு உள்ளது.
மாகாண சபைக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதில் தற்போதைய ஜனாதிபதி மிக அக்கறையுடன் செயல்பட்டு வருகின்றார் என்றார்.
திறப்பு விழா
பாடசாலை சமூகத்தினரால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நுழைவாயில் கட்டிடத்தை அமைச்சர் திறந்து வைத்ததுடன்,இப்பாடசாலையின் நூற்றாண்டு சிறப்பு மலரான கதிராளியும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இப்பாடசாலையில் கடந்த காலங்களில் சிறப்பு திறமைகளை காட்டிய மாணவர்கள் அதிதிகளால் கௌரவிக்கப்பட்டனர்.
இப்பிரதேச கலை கலாச்சாரங்களை எடுத்துரைக்கும் வகையில் கலை நிகழ்வுகளும் இங்கு இடம்பெற்றதுடன், அமைச்சரினால் கடந்த ஆண்டு கல்வி பொது சாதாரண தரப்பரீட்சையில் ஒன்பது திறமை சித்திகளை பெற்ற மாணவன் ஒருவருக்கு அமைச்சரினால் தனது சொந்த நிதியிலிருந்து பத்தாயிரம் ரூபாய் பண பரிசு வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்விற்கு இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்,வாகரை பிரதேச செயலாளர் ஜி.அருணன் ,கல்குடா வலயக்கல்வி உயர் அதிகாரிகள், பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் நூற்றாண்டு விழா நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan
