ஒழுக்கமான பிக்குவாக ஞானசார தேரரை திருநிலைப்படுத்திய ஜனாதிபதி
ஒரே நாடு - ஒரே சட்டத்தை உருவாக்கும் பொறுப்பை கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கியதன் மூலம் ஜனாதிபதி, ஞானசார தேரரை ஒழுக்கமான பிக்குவாக திருநிலைப்படுத்தியுள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே (Hesha vithanage) தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக பௌத்த மக்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து புண்ணியதானம் வழங்குவார் எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் ஹேசா விதானகே இதனை குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத் தரப்பினர் ஐக்கிய மக்கள் சக்திக்குள் காணப்படும் பிரச்சினைகள் பற்றி சில சந்தர்ப்பங்களில் என்னுடன் பேசியுள்ளனர்.
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட யோசனையின் போது, அரசாங்கத்திற்கு மேலும் சிலரது உதவி அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள பிரச்சினைகள் பற்றி தான் ஊடகங்களிலும் பேசிய பின்னர், சஜித் பிரேமதாசவின் தாயாரான ஹேமா பிரேமதாசவும் அது பற்றி தன்னுடன் பேசியதாக கூறியுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21 Evening