ஜனாதிபதி - மலையகக் கட்சிகள் சந்திப்பு ஒத்திவைப்பு: மனோ தகவல்
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய வம்சாவளி மலையக கட்சிளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பை நடத்த, ஜனாதிபதி செயலகம் விடுத்த அழைப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கலந்தாலோசனையின் பின்னர், குறித்த சந்திப்பு எப்போது இடம்பெறும் என்ற திகதியை தெரிவிப்பதாக ஜனாதிபதி செயலகம் தனக்கு அறிவித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டமைக்கான காரணம்

இந்த சந்திப்பு எதிர்வரும் 11ஆம்
திகதி வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 12ஆம் திகதி நுவரெலியாவில், தமிழ் முற்போக்குக் கூட்டணி, 'மலையகம் - 200' தொடர்பில் நடத்தவுள்ள, 'நாம் இலங்கையர்' பேரணி காரணமாக, கூட்டணி எம்.பிக்கள் 11ஆம் திகதி கொழும்பில் இல்லாத காரணத்தாலும், 10ஆம் திகதி, பெருந்தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில், தமிழ் முற்போக்குக் கூட்டணி முன்வைத்துள்ள முழுநாள் விவாதம் காரணமாகவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பு அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஜனனி சொன்ன ஒரே ஒரு விஷயம், ஷாக்கான ஈஸ்வரி, கதிர் போடும் திட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
விஜய் ஆட்சி அமைப்பது குறித்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பரபரப்பு வீடியோ... இதோ Cineulagam
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam