நீங்கள் ஒற்றை யானை தானே?:ஜனாதிபதியிடம் கேட்ட பொதுமக்கள்
அனுராதபுரம் இசுருமுனி வணக்கஸ்தலத்திற்கு சென்றிருந்த உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடியுள்ளார்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாத்திரமல்லாது, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும் ஜனாதிபதியுடன் உரையாடியுள்ளனர்.
ஜனாதிபதி:அம்மா எங்கிருந்து வந்தீர்கள்?.
மக்கள்:யாபஹூவ,மஹாவ.
ஜனாதிபதி:தற்போது இருக்கும் குறைப்பாடு என்ன?பெட்ரோல் இன்னும் கிடைக்கவில்லையா?.
மக்கள்:இல்லை... இல்லை... யானை பிரச்சினை இன்னும் இருக்கின்றது
ஜனாதிபதி:யானை பிரச்சினை எனக்கும் இருக்கின்றது.
மக்கள்:சேர் நீங்கள் ஒற்றை யானை தானே.. தற்போது என்றால் இரண்டு பேர் இருக்கின்றனர்.
ஜனாதிபதி:தற்போது பெரும்போக பயிர் செய்கை ஆரம்பமாக உள்ளது.உரம் மற்றும் இயந்திரங்களுக்கு எண்ணெய் ஆகியவற்றை பெற்று தருகிறோம்.பெரும் போகத்தை சரியாக செய்தால், எமக்கு சற்று நிவாரணம் கிடைக்கும். பெரும் போகத்தை முழுமையாக செய்ய எதிர்பார்த்துள்ளோம்.
மக்கள்:விவசாயிகளை மரணிக்க செய்திருந்தனர்.
ஜனாதிபதி:இல்லை இம்முறை நாங்கள் வழங்குவோம் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

குணசேகரன் மற்றும் அவரது அம்மா திட்டத்தை தெரிந்துகொண்ட ஜனனி.. எதிர்நீச்சல் சீரியல் அடுத்த அதிரடி புரொமோ Cineulagam

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri
