மீண்டும் இலங்கையில் பொருளாதார நெருக்கடி.. சபையில் வைத்து ஜனாதிபதி அநுர அளித்துள்ள உறுதி
Update : 05.06PM
2026ஆம் ஆண்டுக்காக நிறைவேற்றப்படும் குறைநிரப்பு மதிப்பீட்டால் எவ்வித பொருளாதார நெருக்கடியும் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லையென ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
2026ஆம் ஆண்டுக்கான குறை நிரப்பு பிரேரணை குறித்து நாடாளுமன்றில் தற்போது அவர் ஆற்றி வரும் உரையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், இதன் மூலம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் பொருளாதாரம் பாரிய சரிவைச் சந்திக்கப்போகின்றது என்று பிரசாரங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அப்படி ஒரு நிலை வராது என்பதை இதன்போது ஜனாதிபதி உறுதியாக குறிப்பிட்டுள்ளார்.
500 பில்லியனுக்கான குறைநிரப்பு மதிப்பீடு நிறைவேற்றப்பட்டால் பொருளதார நெருக்கடி ஏற்படும் சாத்தியங்கள் காணப்படுவதாக சமூகத்தில் பேசப்படுகிறது.
அண்மையில் எதிர்க்கட்சிகள் எனக் கூறிக் கொள்வோரின் கலந்துரையாடலில் இது தொடர்பில் பேசப்பட்டுள்ளது.
நாம் பொருளாதாரத்தை ஒரு சக்திவாய்ந்த கட்டமைப்புக்கு கொண்டு வந்திருந்தோம். அவ்வாறான ஒரு நிலைமை இருந்திருக்காவிட்டால் இந்த சூறாவளித் தாக்குதலில் நாம் மீளெழுந்திருக்க முடியாமல் போயிருக்கும்.
அவ்வாறான ஒரு கட்டமைப்பினாலேயே நாம் இவ்வளவு நிவாரணங்களை கொடுக்க முடிந்தது.
புதிய இணைப்பு
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சற்றுமுன்னர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
முதல் இணைப்பு
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (19) நாடாளுமன்றத்திற்கு வருகை தரவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அவசர அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவருவதற்கும், சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 500 பில்லியன் ரூபாய் குறைநிரப்பு மதிப்பீட்டை நிறைவேற்றிக்கொள்வதற்காக நடைபெறும் விவாதத்தில் கலந்துகொள்வதற்காகவே அவர் வருகை தருகின்றார்.
நாடாளுமன்றத்திற்கு வருகை
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவருவதற்காக நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த 500 பில்லியன் ரூபாய் குறைநிரப்பு மதிப்பீடு இன்று(2025.12.19) நிறைவேற்றப்படவுள்ளது.

2026 ஆம் ஆண்டிற்குரிய 500 பில்லியன் ரூபாய் பெறுமதியான இந்த குறைநிரப்பு மதிப்பீட்டை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய நேற்று(2025.12.18) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam