13 ஆம் திருத்ததை நடைமுறைப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி: சி.வி.விக்னேஸ்வரன் (Video)
ஜனாதிபதி கட்டாயமாக 13 ஆம் திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் (24.07.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
13 ஆம் திருத்தச்சட்டம் மட்டும் தமிழ் மக்களுக்கு போதுமானதாக இருக்குமா இல்லையா என்பது தற்போது ஒரு பிரச்சினை அல்ல.
உதாரணமாக நான் முதலமைச்சராக இருந்தபோது தமிழ்த்தலைவர்கள் எங்களுக்கு சமஷ்டி வேண்டும் புதிய அரசியல் யாப்பு வேண்டும் என்றெல்லாம் போராட்டம் செய்து கொண்டிருந்தார்கள்.
அதேநேரத்தில் நான் என்னுடைய கடமையை செய்து கொண்டிருந்தேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனாதிபதி ரணில் சி.வி.விக்னேஸ்வரனுடன் கலந்துரையாடிய முழுமையான விடயங்கள் கீழ்வரும் காணொளியில் முழுமையாக உள்ளடக்கப்பட்டிருக்கின்றது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
