இலங்கை மக்களை நெருக்கும் சுமை! ஜனாதிபதி அநுர இன்று வெளியிடப் போகும் மிக முக்கிய அறிவிப்பு
தற்போதைய நிலைமை குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று இரவு (17.03.2026) ஒரு சிறப்பு ஊடக சந்திப்பை நடத்த உள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து இந்த விடயத்தை அவர் கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், "வெள்ளிக்கிழமை ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 7.30 மணிக்கு ஒரு ஊடக சந்திப்பும் நடத்தப்படும்.
கலந்துரையாடல்
அந்த நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் நாடாளுமன்றத்தில் இருந்தால், அவர்கள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

ஜனாதிபதி மட்டத்தில் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த அவர்கள் விரும்பினால், வெள்ளிக்கிழமை அன்று எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும் என்றும் நாங்கள் நம்புகிறோம்." என குறிப்பிட்டுள்ளார்.