மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை அதிகரிக்க ஜனாதிபதி ஆலோசனை
பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மகாபொல (Mahapola) புலமைப்பரிசில் கொடுப்பனவை பத்தாயிரம் ரூபாவாக அதிகரிக்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) கவனம் செலுத்தியுள்ளார்.
தற்போதைக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாதம் தோறும் ஐயாயிரம் ரூபா மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவாக வழங்கப்படுகின்றது.
நிதியமைச்சின் அதிகாரிகள்
முன்னைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் எடுக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் தொடக்கம் குறித்த கொடுப்பனவு 7 ஆயிரத்து 500 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை பத்தாயிரம் ரூபா வரை அதிகரிப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தேசித்துள்ளார்.
நிதியமைச்சின் அதிகாரிகளுடன் அவர் இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஆனந்தியின் கர்ப்பத்திற்கு மகேஷ் தான் காரணமா... பஞ்சாயத்தில் பரபரப்பின் உச்சம், சிங்கப்பெண்ணே சீரியல் Cineulagam

ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri
