கோட்டாபயவை பதவி விலகுமாறு பகிரங்க வேண்டுகோள் விடுத்த முன்னாள் அமைச்சர்
ஜனாதிபதி பதவி விலகினால் நாட்டின் பொருளாதார நெருக்கடியினை தீர்க்க எனது பங்கு முழுமையாக கிடைக்கும் என முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ்வின் நிதியொதுக்கீட்டில் காங்கேயனோடை வட்டாரத்திற்குற்பட்ட முன்பள்ளி மாணவர்களுக்கும், பாடசாலைகளுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் வைபவம் காங்கேயனோடை அல்-அக்ஸா பாடசாலை பிரதான மண்டபத்தில் நேற்று(04) மாலை இடம் பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வேண்டுகோள்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும்.
அவ்வாறு அவர் பதவி விலகினால் நாட்டின் பொருளாதார நெருக்கடியினை தீர்க்க எனது பங்கு முழுமையாக இருக்கும்.” என கூறியுள்ளார்.
நிகழ்வு

மண்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஏ.பீ.றஸீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| சபையில் கடும் குழப்பம்! ஜனாதிபதி கோட்டாபயவை வெளியேறுமாறு கூச்சல் |
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட மாற்றம்... முழு விவரம் Cineulagam
ரஷ்யாவுடன் இறுகும் போர்... பிரித்தானிய இராணுவத்திற்கு 28 பில்லியன் பவுண்டுகள் நிதி பற்றாக்குறை News Lankasri
சென்னை தம்பதியரின் குளியலறைக்குள் எட்டிப்பார்த்த ஹொட்டல் ஊழியர்: நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி News Lankasri