மிக மோசமானவர்களின் பட்டியலில் ஜனாதிபதி கோட்டாபய
ஊடக சுதந்திரத்தைப் பெருமளவில் முறியடிக்கும் 37 அரச தலைவர்கள் அல்லது அரசாங்கத் தலைவர்களின் பட்டியலில் இலங்கையின் தற்போதைய அரச தலைவரான கோட்டாபய ராஜபக்சவின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளதாக 'RSF' என அழைக்கப்படும் எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தப் பட்டியலில் இலங்கையின் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச இடம்பிடித்துள்ளதுடன், முதல் முறையாக இரு பெண்களும் ஒரு ஐரோப்பியரும் உள்வாங்கப்பட்டுள்ளனர். எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,
பிரான்ஸ் தலைநகர் பரிஸை தலைமையாகக் கொண்டு இயங்கும் எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் ஊடக சுதந்திர வரைபடத்தில் 19 பேர் சிவப்பு நிறத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த 19 பேரும் ஊடக சுதந்திரத்துக்கு எதிரானவர்கள் என்ற வகையில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. 16 நாடுகளின் தலைவர்கள் மிகவும் மோசமான பிரிவில் கறுப்பு நிறத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஊடக சுதந்திரத்துக்கு எதிராகச் செயற்படும் கொடுங்கோலர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அதற்கமைய இந்தப் பட்டியலில் புதிதாக இலங்கையின் அரச தலைவரான கோட்டாபய ராஜபக்சவும் சேர்க்கப்பட்டிருக்கின்றார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய பிரதமரான மகிந்த ராஜபக்ச அரச தலைவராகப் பதவிவகித்த காலத்தில், அவரது அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கோட்டாபய ராஜபக்ச பதவிவகித்த காலத்திலும், அதற்குப் பின்னரான தற்போதைய காலத்திலும் ஊடகவியலாளர்கள் எதிர்கொண்டிருக்கின்ற சவால்கள் தொடர்பில் அதில் கூறப்பட்டுள்ளன.
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் இலங்கையில் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளைப் பற்றி ஊடகவியலாளர்களும், ஊடகங்களும் செய்தி அறிக்கையிடுவது பாரிய சவால் மிக்கதாக அமைந்திருப்பதாகவும் எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்சவின் கட்டளையின் கீழ் ஊடகவியலாளர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அச்சறுத்தல்கள், இடையூறுகள் என்பன தொடர்ந்தும் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய நிலைமையில், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் நிலைமைகள் பற்றி புலனாய்வுச் செய்தி அறிக்கையிடலும் கூட அச்சுறுத்தலாகியிருப்பதாக மேலும் கூறப்பட்டுள்ளது.
அவ்வாறான சவால்களை மீறி அதனைச் செய்பவர்கள் இரண்டுவிதமான அபாயங்களை எதிர்கொள்ள நேரிடுகின்றது. மரண அச்சுறுத்தல் மற்றும் காவல்துறை ஊடாக சட்ட ரீதியிலான கைதுகள் இடம்பெற வாய்ப்புகள் இருப்பதாகவும், எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு தெரிவிக்கின்றது.
ஊடகவியலாளர்களுக்கு அபாயமான நாடுகளின் பட்டியலில் 184 நாடுகளில் 127ஆவது இடத்தை இலங்கை பிடித்திருக்கின்றது.
இலங்கை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக கடமை புரிந்த 10 வருடங்களிற்குள் 14 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதாகவும், 20 ஊடகவியலாளர்கள் கொலை அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல்கள் காரணமாக இலங்கையிலிருந்து வெளியேறியிருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 9 மணி நேரம் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
