பவித்ராதேவி வன்னியாராச்சிக்கு வழங்கப்பட்ட பதவி!
இலங்கை- ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இலங்கை-ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற நட்புறவு சங்கத்துக்கான நிர்வாகிகளைத் தெரிவுசெய்வதற்கான விசேட கூட்டம் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன மற்றும் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக் குழுவின் தூதுவர் டெனிஸ் சைபி ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
இலங்கை-ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற நட்புறவு சங்கம்
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, நாடாளுமன்ற உறுப்பினர்களான (வைத்திய கலாநிதி) உபுல் கலப்பதி, ஹெக்டர் அப்புகாமி ஆகியோர் இலங்கை-ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய செயலாளர்களாகத் தெரிவுசெய்யப்பட்டனர்.
ஐரோப்பிய ஒன்றியமானது வறுமை ஒழிப்பு, ஜனநாயக ஆட்சி, உள்நாட்டு அபிவிருத்தி, விவசாயம், நீர் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மீட்சி மற்றும் மறுசீரமைப்புக்குப் பல்வேறு உதவிகளை வழங்கியிருப்பதுடன், 2014 முதல் 2020ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் அபிவிருத்தி உதவியின் ஊடாக நிதி உதவிகளை வழங்கியிருப்பதாக இங்கு உரையாற்றிய சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கோவிட்-19 தொற்றுநோய் நிலவிய காலப் பகுதியில் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய உதவிகளையும் அவர் நினைவுகூர்ந்தார்.
ஆசியாவில் ஜனநாயகத்தின் தாயாக இலங்கை விளங்குகிறது என தாம் நாம்புவதாகவும், பல்வேறு சவால்களுக்கு மத்தியில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் இலங்கையின் மீள்தன்மை ஜனநாயகம் எவ்வளவு முக்கியமானது என்பதை எடுத்துக்காட்டுகிறது என்றும் தூதுவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் செயற்பட எதிர்பார்ப்பதாக இலங்கை – ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய தலைவர் அமைச்சர் பவித்திராதேவி வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

40 வயதுக்கு மேல் திருமணம் செய்துகொண்டது ஏன்?- உண்மையில் எனது வயது 44 இல்லை, நடிகை ஓபன் டாக் Cineulagam

மிகவும் ஆபத்தானவர், நெருங்க வேண்டாம்: தீவிரமாக தேடப்படும் தமிழர் தொடர்பில் லண்டன் பொலிசார் எச்சரிக்கை News Lankasri
