நாட்டை கட்டியெழுப்ப ஜனாதிபதிக்கு காலத்தை வழங்க வேண்டும்:பெல்பொல விபஸ்ஸி தேரர்
நீண்டகால அரசியல் அனுபவம் கொண்டுள்ள தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நாட்டை கட்டியெழுப்ப காலத்தை வழங்க வேண்டும் என கோட்டே விகாரையின் ஆவண காப்பாளரும் ஜப்பான் நாட்டின் பிரதான சங்க நாயக்கருமான பெல்பொல விபஸ்ஸி தேரர் தெரிவித்துள்ளார்.
போராட்டங்களில் இருந்து விலகி ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
போராட்டங்களை நடத்தி ஆட்சியாளர்களை விரட்டும் முறையில் இருந்து விலகி, தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டு, மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நாடு மிகப் பெரிய அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ள சந்தர்ப்பத்தில் தற்போதைய ஜனாதிபதி அச்சமின்றி சவாலை ஏற்றுக்கொண்டுள்ளார். அனைத்து சவால்களையும் வெல்ல அவருக்கும் முடிய வேண்டும் எனவும் விபஸ்ஸி தேரர் தெரிவித்துள்ளார்.
சேதவத்தை புராண விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று மாலை சேதவத்தை வெஹெரகொட புராண விகாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர், ஜனாதிபதிக்கு ஆசி வழங்கிய போதே விபஸ்ஸி தேரர் மேற்கண்டாறு கூறியுள்ளார்.
வரலாற்று சிறப்புமிக்க பௌத்த விகாரையான சேதவத்தை வெஹெரகொட புராண விகாரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பரம்பரையினரால் நன்கொடையாக வழங்கிய காணியில் அமைந்துள்ள விகாரையாகும்.