ஜனாதிபதி ரணிலுக்கு சிறிது காலத்தை வழங்க வேண்டும்:வஜிர அபேவர்தன
ஒரு வருடமாக கண்களில் புலப்படாத எரிவாயு,இரண்டு ஆண்டுகளாக காணக்கிடைக்காத இரசாயன பசளை என்பன தற்போது சிறிது சிறிதாக மீண்டும் கண்ணுக்கு தென்பட ஆரம்பித்துள்ளதாக தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஆறு மாதங்களுக்கு சிக்கல் இல்லாமல் நாட்டை முன்னெடுத்துச் செல்ல இடமளிக்க வேண்டும்
இதனால், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆறு மாதங்கள் எந்த சிக்கலும் இல்லாமல் நாட்டை முன்னெடுத்துச் செல்ல இடமளிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் தொழிற்சங்கங்கள் பதாகைகளை ஏந்தினால், மீண்டும் டீசல், பெட்ரோல் இல்லாமல் போகும். இதனால், இளம் தலைமுறையினரின் எதிர்காலமே அழிந்து போகும். தொழிற்சங்கங்களுக்கு உரிமைகள் இருக்கின்றன.
நாடு தற்போது வீழ்ச்சியடைந்து வங்குரோத்து நிலையில் உள்ளது
எனினும் தற்போது இருப்பது வீழ்ச்சியடைந்த வங்குரோத்து நாடு என்பதை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும். ரணில் விக்ரமசிங்கவுக்கு மாத்திரமல்லாது நாடும் அணியும் ஆடைகள் கூட இழந்த சந்தர்ப்பத்திலேயே அவர் ஜனாதிபதியாக பதவிக்கு வந்தார்.
ரணிலும் சிறிது வாய்ப்பை வழங்கினால் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் பிரச்சினை தீர்ந்து நாடு மீண்டும் சுபிட்சமான நிலைமைக்கு வரும் எனவும் வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.