உயர்கல்வி அமைச்சின் அமைச்சரவைப் பத்திரங்களை திருப்பி அனுப்பிய ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த வார அமைச்சரவைக் கூட்டத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்த உயர்கல்வி அமைச்சின் அமைச்சரவைப் பத்திரங்களை திருப்பி அனுப்பியுள்ளார்.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உயர் கல்விக்காக வெளிநாடு செல்லும் போது அவர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கும் விமான டிக்கட் அரசாங்க செலவில் வழங்கப்பட வேண்டும் என்று கடந்த வாரம் அமைச்சரவைப் பத்திரம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
அதனை அமைச்சரவைச் செயலாளருக்கு திருப்பி அனுப்பியுள்ள ஜனாதிபதி ரணில், தற்போதைக்கு அதனை அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்க வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளார்.
பல்கலைக்கழக பேராசிரியர்கள் விடுத்த கோரிக்கை நிராகரிப்பு
இந்நிலையில் பல்கலைக்கழக உபவேந்தர்களை நியமிக்கும் போது நேர்முகத் தெரிவு முறையை பின்பற்ற வேண்டாம் என்று பல்கலைக்கழக பேராசிரியர்கள் விடுத்த கோரிக்கையையும் ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.
பல்கலைக்கழகங்களின் ஆளுனர்சபை மூலம் பொருத்தமான நபர்கள் மூவரின் பெயர்களை தனக்குச் சிபாரிசு செய்யும் பட்சத்தில் அவர்களில் இருந்து பொருத்தமான ஒருவரை தான் தேர்ந்தெடுத்து நியமனம் செய்யத் தயாராக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam
