மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவரை பதவி நீக்கிய ஜனாதிபதி
மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் சிறிபால அமரசிங்கவும் அவரது மகனும் நக்கிள்ஸ் உலக பாரம்பரிய தளத்தின் எல்லைக்குள் உணவகம் ஒன்றை நிர்மாணிப்பதில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த அறிக்கைகளை தொடர்ந்து, சுற்றுச்சூழல் அமைச்சு, அதிகாரசபையின் தலைவர் மற்றும் அவரது மகன் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு குழுவை நியமித்து, இந்த வாரம் அறிக்கையை கையளித்துள்ளது.
பதவி நீக்கம்

நக்கிள்ஸ் பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் வர்த்தக திட்டத்திற்கு மேலதிகமாக மொரகஹகந்த நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள கட்டுகித்துல எல பிரதேசத்திலும் தந்தையும் மகனும் இவ்வாறான செயற்திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார குற்றம் சுமத்தியிருந்தார்.
இதனையடுத்து அதிகாரசபையின் தலைவர் சிறிபால அமரசிங்க உடனடியாக நடைமுறைக்குவரும்
வகையில் பதவி நீக்கம் செய்யப்பட்டு, சுபுன் எஸ் பத்திரகே புதிய தலைவராக
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.