பேரிடர் தொடர்பில் பொய்யான தகவல் - ஜனாதிபதி பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு
பேரிடர் காலப்பகுதிகளில் பொய்யான தகவல்களை பரப்பி மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிதிப அநுரகுமார திசாநாயக்க எச்சரித்துள்ளார்.
கொத்மலை நீர்த்தேக்கத்தின் அணையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டன.
இந்நிலையில் இந்த தகவலை பரப்பியர்களை உடன் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டார்.
மாகாண ஆளுநர்களுடன் நேற்று இடம்பெற்ற ஜூம் கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பதற்றமடைந்த மக்கள்
இந்த பொய்யான தகவல்களால் பதற்றமடைந்த மக்கள் அங்கிருந்து தப்பிச் செல்லும் போது உயிரிழந்த சம்பவங்களும் பதிவாகி இருந்தன.

இவ்வாறான இக்கட்டான நிலைமையின் போது மக்களின் மனநிலையை புரிந்து கொண்ட தகவல்களை சரியான முறையில் வெளிப்படுத்த வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த போலித்தகவல்களால் அச்சம் அடைந்து மனப்பிறழ்வு ஏற்பட்ட பலர் இன்னும் அந்த பதற்றத்துடன் உள்ளதாக கொத்மலையை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கொத்மலை அணையின் வான்கதவுகளில் ஒரு வான்கதவை திறப்பதற்காக எழுப்பிய வழமையான பாதுகாப்பு ஒலியை அடிப்படையாகக் கொண்டு இந்த பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மத்திய மாகாண பொலிஸ் தலைமை அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்தார்.
தலையில் துண்டு.. தலைமறைவான குணசேகரன்! சொத்து பற்றிய உண்மையை போட்டுடைத்த ஜனனி! எதிர்நீச்சல் 2 ப்ரோமோ Cineulagam