ஜனாதிபதியின் விசேட விருதை பெற்றுக்கொண்ட வடக்கின் தமிழ் பாடசாலை
கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலயம் 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதினை பெற்றுக்கொண்டது.
குறித்த விருதினை இவ்வாண்டு பெற்றுக்கொண்ட ஒரேயொரு தமிழ் பாடசாலையாக கிளிநொச்சி - அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலயம் காணப்படுகிறது.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் இன்று (28.06.2024) இடம்பெற்ற நிகழ்வில் மேற்படி விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
சுற்றுச் சூழல் விருது
நாடாளவிய ரீதியில் பாடசாலைகள், நிறுவனங்கள், அமைப்புக்கள் என 902 பேர் விண்ணப்பத்திருந்த நிலையில் கிளிநொச்சி விவேகானந்த வித்தியாலயம் அவற்றுக்குள் தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே குறித்த பாடசாலை சுற்று சூழல் அமைச்சின் இரண்டு சுற்றுச் சூழல் விருதினை பெற்றுள்ளதோடு, சுற்றுச் சூழல் தகவல் நிலையத்தினையும் பாடசாலை மட்டத்தில் பெற்றுக்கொண்ட ஒரு பாடசாலையாக காணப்படுகின்றது.
2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த பாடசாலை மிக குறுகிய காலத்திற்குள் கல்வி மற்றும் இணைபாட செயற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் தேசிய மட்டத்தில் சாதனை புரியும் அளவில் வளர்ந்துள்ளமை அனைவரினதும் பாராட்டுக்குரியதாக மாறியிருக்கிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |