ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்தவர்களில் 37 பேர் கைது
ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் இதுவரை 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் 71 பேரைக் கைது செய்வதற்கு பொலிஸாரினால் பொதுமக்களின் உதவி கோரப்பட்டிருந்தது.
71 பேரில் 37 பேர் கைது

ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்தமை, பலவந்தமாக அங்கு தங்கியிருந்தமை மற்றும் அங்கிருந்த பொருட்களை களவாடிச் சென்றமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்களுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ளவும், வழக்குத் தாக்கல் செய்யவும் பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் பொலிஸாரினால் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்ட 71 பேரில் 37 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
08 பேர் பெண்கள்

அவர்களில் 08 பேர் பெண்கள் என்றும் தெரியவந்துள்ளது .
கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து பேர் விளக்கமறியலுக்கு அனுப்பப்பட , ஏனையவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri