புகைப்படங்களை வெளியிட்டு பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்குத் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை இனம் காண பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.
கண்காணிப்புக் கமரா காட்சிகள்
சம்பவம் இடம்பெற்ற போது ரணிலின் வீட்டிற்கு அயல் வீடுகளில் இருந்த கண்காணிப்புக் கமராக்களின் (சீ.சி.டீ.வி) காட்சிகளின் அடிப்படையில் தற்போதைக்கு பத்து பிரதான சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களைப் பற்றிய தகவல்களை பெற்றுக் கொள்ளவும், அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்ளவும் பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.
ஜனாதிபதி ரணிலின் வீட்டுக்கு தீ வைத்த சம்பவம்: பிரதான சந்தேக நபர் உட்பட மூவர் கைது |
தொலைபேசி இலக்கங்கள்
புகைப்படங்களில் உள்ள நபர்கள் குறித்து ஏதேனும் தகவல் அறிந்தவர்கள் அது தொடர்பான விபரங்களை தொலைபேசி இலக்கங்கள் வாயிலாக அறியப்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தகவல்கள் வழங்குபவர்கள் தொடர்பான விபரங்கள் இரகசியமாக வைக்கப்படும் என்றும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
தகவல்களை 0718594950, 0718594901, 0718594924, 0112422176 என்ற தொலைபேசி இலக்கங்கள் வழியாக தெரியப்படுத்த முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.











இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
