ஜனாதிபதி மாளிகையின் தற்போதைய நிலவரம்
இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை பதவி விலகுமாறு தெரிவித்து கடந்த 9ஆம் திகதி கொழும்பில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பன மக்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருந்தன.
இந்த நிலையில் கட்சித் தலைவர்களின் அவசர கூட்டம் இடம்பெற்றதை தொடர்ந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 13ஆம் திகதி பதவியிலிருந்து விலகுவதாக சபாநாயகரிடம் அறிவித்திருந்தார்.
அரச உடமைகள் ஆர்ப்பாட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில்
என்ற போதும் ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பன தொடர்ந்தும் ஆர்ப்பாட்டக்காரர்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன.
இவ்வாறான சூழ்நிலையில் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை இன்று ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி மாளிகையின் தற்போதைய நிலவரம்,