ஜனாதிபதி நிதியத்தில் இருந்து அள்ளிக் கொடுத்த ரணில்! 11 மாதங்களில் 300 கோடி செலவு
ஜனாதிபதி நிதியத்தில் இருந்து கடந்த 11 மாதங்களில் 300 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் பொதுமக்களின் பல்வேறு நோய்களுக்கான சிகிச்சை உதவியாக 58 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
அதற்கு மேலதிகமாக க.பொ.த.உயர்தர மாணவர்களுக்கான புலமைப் பரிசில் நிதியாக 32 கோடி ரூபாயும், மகாபொல புலமைப்பரிசில் நிதியத்தின் ஊடாக 16 கோடி ரூபாயும், இளம் பராயத்தினரின் நலனோம்புகைத் திட்டங்களுக்கு 15 கோடியும், பிக்குமார் கல்விக்காக மூன்று கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி நிதியம்
முன்னைய காலங்களில் ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகள் குறிப்பிட்ட சில துறைகளில் மட்டும் வரையறுக்கப்பட்டிருந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தனது பதவிக்காலத்தில் ஆரம்ப வகுப்பு தொடக்கம் உயர்தரம் வரையான பாடசாலை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் உள்ளிட்ட புதிய திட்டங்களின் மூலம் ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகளை விஸ்தரித்துள்ளார்.
அதன் ஊடாக கூடுதலான பொதுமக்கள் ஜனாதிபதி நிதியத்தின் மூலம் பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 3 நாட்கள் முன்

சூப்பர் சிங்கர் போட்டியாளருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் ஆண்டனி... சந்தோஷத்தில் போட்டியாளர், வீடியோ Cineulagam
