தலைவர் கிண்ண உதைபந்தாட்ட இறுதிப் போட்டி நாளை
யாழ்ப்பாணம் உதைபந்தாட்ட லீக்கினால் நடத்தப்படுகின்ற தலைவர் கிண்ண உதைபந்தாட்ட இறுதிப் போட்டி நாளையதினம் இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாணம் - அரியாலை உதைபந்தாட்ட பயிற்சி நிலையத்தில் நாளை(10) மாலை 3.30 மணிக்கு இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில் நாவாந்துறை சென் நீக்கீலஸ் விளையாட்டுக் கழகமும், குருநகர் பாடும்மீன் விளையாட்டுக் கழகமும் மோதவுள்ளன.
போட்டி தொடர்பான ஊடக சந்திப்பு இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றபோதே இவ் விடயம் தெரிவிக்கப்பட்டது.
இப் போட்டிக்கு பிரதம விருந்தினராக இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமரும் சிறப்பு விருந்தினராக யாழ் உதைபந்தாட்ட லீக்கின் தலைவர் இம்மானுவேல் ஆனல்ட்டும் கலந்து கொள்ளவுள்ளனர்.
போட்டிக்கான செலவை உதைபந்தாட்ட லீக்கின் தலைவர்
இம்மானுவேல் ஆனல்ட்டும் ஜனசக்தி காப்புறுதி நிறுவனமும் பொறுப்பேற்றுள்ளது.
போட்டியின் வெற்றி கிண்ணமும் இன்றையதினம் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது.





நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவி ஷோவிற்கு வந்த தொகுப்பாளினி டிடி... கலகலப்பான நிகழ்ச்சி, வீடியோ இதோ Cineulagam
