புதிய ஜனாதிபதிக்கு பொதுமக்களிடமிருந்து விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை (Video)
புதிய ஜனாதிபதி நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை உடனடியாக தீர்க்காவிட்டால், கோட்டாபய ராஜபக்சவை போலவே ரணில் விக்ரமசிங்கவும் போராட்டத்தின் ஊடக விரட்டியடிக்கப்படுவர், என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், மக்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தனர்.
இதன் போது எமது ஊடகத்தித்திற்கு மக்கள் மேலும் தெரிவித்ததாவது,
"புதிய ஜனாதிபதியின் நியமனம் மக்கள் இன்று முகம் கொடுக்கும் பிரச்சினைகளை ஓரளவு தீர்க்கும். நாட்டில் ஏற்றப்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினைகளை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இளைஞர்களின் தொழில் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தர வேண்டும்," என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பான மக்கள் கருத்துக்களை இக்காணொளியில் காணலாம்,



