வெளிநாடு செல்லத் தயாராகிறாரா கோட்டாபய....! ஜனாதிபதியின் பேச்சாளர் வெளியிட்டுள்ள தகவல்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
போராட்டங்கள் காரணமாக வெளிநாடு செல்ல தயாராகும் ஜனாதிபதி

நாளையும் நாளை மறுதினமும் கொழும்பை அடிப்படையாக கொண்டு நடைபெறும் போராட்டம் காரணமாக ஜனாதிபதி இவ்வாறு வெளிநாடு செல்ல தயாராகி வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது.
ஜனாதிபதி இலங்கையிலேயே இருக்கின்றார்

எனினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கையில் இருப்பதாகவும் வெளிநாடு செல்வதற்காக எந்த தயார் நிலையிலும் அவர் இல்லை எனவும் ஜனாதிபதியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுக்கும் வகையில் நாளைய தினம் எதிர்ப்பு போராட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
இதன் காரணமாக கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதிகள் உட்பட முக்கிய அரசியல் தலைவர்களின் வீடுகள் அமைந்துள்ள இடங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.
வயது உண்மை தெரிந்ததும் சரவணன் எடுத்த அதிரடி முடிவு, கதறி புலம்பும் மயிலு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam
வெண்ணிலா சொன்ன விஷயத்தை கேட்டு கடும் ஷாக்கில் கண்மணி, என்ன முடிவு எடுப்பார்.. அன்புடன் கண்மணி புரொமோ Cineulagam