ரணிலின் பதவி காலம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல் - செய்திகளின் தொகுப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவி காலத்தை நாடாளுமன்றம் ஊடாக நீடித்துக்கொள்வதற்கு எந்தவொரு திட்டமும் இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 12 வருடங்களாவது அப்பதவியில் இருக்க வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டு வருகின்றது.
தேர்தல் நடத்துவதற்கு தற்போது நிதியும் இல்லை. எனவே, நாடாளுமன்றத்தில் விசேட சட்டம் ஒன்றை இயற்றியாவது, ஜனாதிபதிக்கு இன்னுமொரு தவணைக் காலம் வழங்கும் திட்டம் உள்ளதா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளிக்கையிலேயே அவ்வாறு எந்தவொரு திட்டமும் இல்லை என அமைச்சரவைப் பேச்சாளர் பதிலளித்தார்.
இந்த செய்தியுடன் மேலும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,