ஜனாதிபதியின் யாழ். விஜயம்: எட்டு பேருக்கு எதிராக தடையுத்தரவு கோரியுள்ள பொலிஸார்
யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயம் செய்யவுள்ள நிலையில் அதற்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் என கருதி எட்டு பேருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கானது யாழ்ப்பாணம் பொலிஸாரினால் நேற்று (02) குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிரதிவாதிகளுக்கு கட்டளை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து பல்வேறு கலந்துரையாடல்களில் பங்கேற்பதற்காக 04ம் திகதி முதல் 07ம் திகதி வரை விஜயம் செய்யவுள்ளார்.
இந்நிலையில் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கான போராட்டத்தை தடுக்கும்
பொருட்டு தடை கட்டளை கோரி பொலிஸார் நீதிமன்றில்
விண்ணப்பித்துள்ளனர்.
இது தொடர்பில் தங்கள் தரப்பு நிலைப்பாட்டினை நேரடியாகவோ, சட்டத்தரணி ஊடாகவோ யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில், புதன்கிழமை(03) மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் பிரதிவாதிகளுக்கு கட்டளையிட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், தவத்திரு வேலன் சுவாமிகள், காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்க பிரதிநிதிகள் என 8 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |