இந்தியாவில் வைத்து ரணில் விடுத்துள்ள அழைப்பிற்கு பிரதமர் மோடி ஆதரவு (Photos)
இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் மிகவும் கடினமான காலங்களில், இந்தியா வழங்கிய உறுதியான ஆதரவுக்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய மக்களுக்கு தனது மனமார்ந்த நன்றியை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இந்தியாவிற்கு தனது முதல் விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் அவர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் வைத்து இன்று (21.07.2023) காலை சந்தித்துள்ளார்.
இந்தியாவின் வளர்ச்சி
இதன்போது ரணில் மேலும் தெரிவிக்கையில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் மேம்படுத்தப்பட்ட பொருளாதார, உள்கட்டமைப்பு, தொழிநுட்ப முன்னேற்றங்களைப் பாராட்டியதுடன், இந்தியாவின் வளர்ச்சி அயல் நாடுகள் மற்றும் இந்து சமுத்திர வலய நாடுகளுக்கு சாதகமான தன்மையை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் இலங்கையில் அனைவரும் பொருளாதார மறுமலர்ச்சி, நிலையான அபிவிருத்தி, நீதி ஆகியவற்றை அடைவதற்கான தனது அர்ப்பணிப்பை ஜனாதிபதி உறுதிப்படுத்தியுள்ளார்.
நல்லிணக்கம், அதிகாரப் பகிர்வுக்கான விரிவான திட்டத்துடன் இணக்கத்தை எட்டுவதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்த நிலையில் இந்த முயற்சிகளுக்கு பிரதமர் மோடி தனது ஆதரவையும், ஒத்துழைப்பையும் தெரிவித்துள்ளார். இலங்கை பொருளாதார சீர்திருத்தங்களை சீராக நடைமுறைப்படுத்தி வருகின்றது.
சாதகமான பெறுபேறுகள்
இந்திய பிரதமருடனான தூதுக்குழு மட்டத்தில் நடைபெற்ற கலந்துரையாடல்களின் மூலம் நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கான சாதகமான பெறுபெறுகள் வெளிப்படுத்தப்படுகிறது.
எடுக்கப்பட்ட தீர்மானங்களின் மூலம் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்த வழிவகுத்துள்ளது.
மேலும், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர பொருளாதார உறவுகள் குறித்து சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் எதிர்கால இந்திய - இலங்கை பொருளாதார பங்காளித்துவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.
இது எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம் இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்வது குறித்து ஜனாதிபதி விக்ரமசிங்க மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் கலந்துரையாடியுள்ளனர்.
இலங்கைக்கு வலுசக்தி வளங்களை, குறைந்த விலையிலும், நம்பகமான விநியோகத்தை உறுதி செய்யவும் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு குழாய்களை அமைப்பதற்கும் இதன்மூலம் வலுசக்தி ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையிலும் கலந்துரையாடப்பட்டது.
முதலாம் இணைப்பு
இந்தியாவுக்கு நேற்று (20.07.2023) பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில், இந்திய வெளிவிவகார அமைச்சருடன் நேற்றிரவு பேச்சு நடத்தினார்.
இன்று காலை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைப் புதுடில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இன்று பகல் சந்தித்துக் கலந்துரையாடினார்.
மேலதிக தகவல் - ராகேஷ்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
