"தொடர்ந்து வழங்கி வரும் ஆணையை இந்த முறையும் மக்கள் வழங்குவார்கள்” கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(Video)
ஜனாதிபதி ரணிலின் இந்திய பயணமும் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பும் இலங்கையிலும் சர்வதேச மட்டத்திலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில்,தமிழர்களுக்கான அரசியல் தீர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை உள்ளடக்கிய கடிதங்களை தமிழ் கட்சிகள் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதற்கமைய தமிழ் தேசிய மக்கள் முன்னணி, எந்தவிதமான சமரசத்திற்கும் அப்பால் வழங்கி வந்த சமஷ்டி ஆட்சி முறைக்குரிய ஆணையை வலியுறுத்தியும் தொடர்ச்சியாக இலங்கை சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து நிறைவேற்றப்பட்ட மூன்று அரசியல் அமைப்புகளையும் நிராகரித்து அதற்குரிய நியாயங்களையும் தெளிவுபடுத்தியுள்ளது என கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் உரையாற்றிய விடயங்களை இந்த காணொளியில் முழுமையாக காணலாம்,