ஜனாதிபதி – அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளர் சந்திப்பு
அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் வர்மா உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் வர்மாவிற்கும் (Richard Verma) இடையிலான சந்திப்பொன்று இன்று (23) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
கடன் மறுசீரமைப்பு
இலங்கை அரசாங்கத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பிரதி இராஜாங்க செயலாளர் இதன்போது பாராட்டுத் தெரிவித்தார்.
விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம் உட்பட இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்படும் முக்கிய பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்பு செயல்முறைகளின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளருக்கு விளக்கமளித்தார்.
ஹூதி கிளர்ச்சியாளர்கள் தொடர்பில் சவுதி அரேபியாவின் ஸ்திரத்தன்மைக்கு ஆதரவு தெரிவித்த ஜனாதிபதி, இந்து சமுத்திரத்தின் சுதந்திரமான கடற்பயணத்திற்கு இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்பை வழங்கும் எனவும் உறுதியளித்தார்.
]நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |