புதிய ஆளுநர்களை நியமிக்க தயாராகும் ஜனாதிபதி
தற்போதுள்ள ஆளுநர்களுக்கு பதிலாக புதிய ஆளுநர்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தற்போதைய ஆளுநர்கள் பலர் இன்னும் சில நாட்களில் பதவி விலக உள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு நெருக்கமானவர்கள் பலர் புதிய ஆளுநர்களாக நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து கட்சிகளையும் உள்ளடங்கிய அரசாங்கம்
இதேவேளை, அனைத்து கட்சிகளையும் உள்ளடங்கிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
அந்த வகையில், தற்போதுள்ள அமைச்சு பதவிகளுக்கு மேலதிகமாக 12 அமைச்சு பதவிகளுக்கு நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும், 30 இராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தற்போதை அரசாங்கத்திற்கு அதரவு வழங்க ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களும் இணக்கம் வெளியிட்டுள்ளதாக கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam
