செப்டம்பர் 11 தாக்குதல் சம்பவத்தில் உயிர் நீத்தவர்களுக்கு ஜனாதிபதி அஞ்சலி
கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் திகதி அமெரிக்காவின் வொஷிங்டன் மற்றும் நியூயோர்க் நகரங்கள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்ட போது உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இந்த தாக்குதல் இடம்பெற்று இருபது ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், ஜனாதிபதி இவ்வாறு தனது பாரியாருடன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
செப்டம்பர் 11 தாக்குதல் நினைவுத் தூபியில் ஜனாதிபதி அஞ்சலி செலுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தின் 76ம் அமர்வுகளில் பங்கேற்றுள்ள நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் விசேட அஞ்சலி நிகழ்வு ஒன்றில் பங்கேற்றுள்ளனர்.
இந்த விசேட நிகழ்வில் பங்குபற்றிய ஜனாதிபதியும் அவரது பாரியாரும் உயிர் நீத்தவர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.